விசேட பண்ட வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உளுந்து, பாசிப்பயறு, கௌப்பி, சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட பண்ட வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியின்படி, உளுந்து (மற்றவை) இதுவரை ஒரு கிலோ கிராமிற்கு 200 ரூபாவாக காணப்பட்ட விசேட பண்ட வரி 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கௌப்பி (மற்றவை), விதை குரக்கன், விதைகள் – (தினை) உள்ளிற்றவைக்கான இறக்குமதி விசேட பண்ட வரி ஒரு கிலோ கிராமிற்கு 70 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இது தவிர சோளத்துக்கும் 25 ரூபாய் விசேட பண்ட வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கௌப்பி மற்றும் குரக்கன் ஆகியவற்றின் இறக்குமதியை விவசாய அமைச்சின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டுமென வர்த்தமானி அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects