வடக்கு கிழக்கு பொருளாதார மேம்பாட்டு நடுவத்தின் ஏற்பாட்டில் ஊட்டச்சத்து குறைவான சிறார்களுக்கு உதவிடும் நோக்கிலும் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்தும் நோக்கிலும் கனடா மட்டக்களப்பு நட்புறவு பண்ணை (22.02.2024) அன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகராலயத்தின் கவுன்சிலர் டனியேல் பூட், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் தியாகராஜா சரவணபவன், புலம்பெயர் கனடிய அமைப்பின் உறுப்பினர்கள், உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
புலம்பெயர் கனடியன் அமைப்பின் நிதி பங்களிப்பில் இச் செயற்றிட்டமானது (22.02.2024) அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகி பதாகைகள் திரை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து முருங்கை மரக்கன்றுகள் அதிதிகளினால் நட்டப்பட்டது.
முருங்கை உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் நோக்கிலும் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுவருகினறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇