மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் ஓவியரான செல்வி ஷயணா ரவிக்குமார் 18-02-2024 அன்று கொழும்பில் நடைபெற்ற கலா பொல திறந்தவெளிக் கலைக் கண்காட்சியில் தனது ஓவியங்களையும் காட்சிப்படுத்தினார்.
கலா பொல என்பது இலங்கையில் வளர்ந்து வரும் ஓவியர்கள் மற்றும் சிற்பிகளை ஊக்குவிக்கும் முகமாக ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் இணைந்து “ஜோர்ஜ் கீட்” அமைப்பினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் திறந்தவெளி கலைக் கண்காட்சியாகும்.
இந்நிகழ்வானது ஓவிய-சிற்ப கலைஞர்கள் இரசிகர்களை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவது மட்டுமன்றி, கலைஞர்களுக்கிடையேயான தொடர்புகளை ஏற்படுத்தவும் அவர்களின் படைப்புகளை சந்தைப்படுத்தவும் உதவுகிறது.
31ஆவது தடவையாக இடம்பெற்ற கலா பொல 2024 நிகழ்வில் மூன்னூறிற்கு மேற்பட்ட கலைஞர்களில் ஒருவராக தனது ஒவியங்களையும் காட்சிப்படுத்திய ஷயானா இவ் ஆண்டு பங்குபற்றிய கலைஞர்களில் மிகவும் இளையவர் எனும் பெருமையைப் பெற்றதுடன், இவரது பல ஓவியங்கள் இரசிகர்களால் கொள்வனவும் செய்யப்பட்டன.
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவியான இவர் சிறு வயது முதல் ஓவியத்துறையில் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇