அம்பாறை மாவட்டம் நிந்தவூரைச் சேர்ந்த சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன்னினால் எழுதிய “வளிமண்டலவியல் ஓர் அறிமுகம் “நூல் வெளியீட்டு நிகழ்வு 25 .02.2024 அன்று இடம்பெற்றது.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி A.H.M.D.நவாஸ், சுங்க திணைக்களத்தின் உயர் நிலை பணிப்பாளர் சம்சுதீன் நியாஸ் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர்,சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
கலாநிதி மொஹமட் சாலிஹீன் எழுதிய “வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்” நூலின் முதல் பிரதியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇