கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி மாதர் கிராம அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் 2023ம் ஆண்டு பயிற்சி பெற்று வெளியேறிய பயிற்சியாளர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட “பிரதேச மட்ட கண்காட்சியும் விற்பனையும்” 28.02.2024 அன்று கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.துஷ்யானந்தன் தலைமையில் மாதர் அபிவிருத்தி நிலையத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் , மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வீ.கோகுலராஜன், சிரேஷ்ட தையல் போதனாசிரியை உள்ளிட்ட திணைக்களத்திற்குப் பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எனப்பலரும் கலந்துகொண்டனர் .
இக்கண்காட்சியில் பயிற்சி பெற்று வெளியேறிய பயிற்சியாளர்களினால் உருவாக்கப்பட்ட உணவு வகைகள், ஆடைகள் மற்றும் கைப்பணிப்பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், விற்பனையினையும் மேற்கொண்டிருந்தனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇