மட்டக்களப்பு பொது நூலகமும், மட்டக்களப்பு பண்பாட்டலுவலகமும் இணைந்து நடாத்திய “துளிர்விடு” சஞ்சிகை வெளியீட்டு விழா மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தலைமையில் 27 .02.2024 அன்று மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில், அதிதிகளாக மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி ர ஞ்சிதமூர்த்தி , பேராசிரியர்களான சி.மௌனகுரு மற்றும் சி.சந்திரசேகரம், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக் கொணரும் வகையில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், “துளிர்விடு” சஞ்சிகை வெளியிடப்பட்டது.
இச்சஞ்சிகையின் முதல் பிரதிகளை சஞ்சிகையின் ஆசிரியர்களான மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் மற்றும் பொதுநூலகர் த.சிவராணி ஆகியோர் இணைந்து மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி ரஞ்சிதமூர்த்தி மற்றும் மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஷ் ஆகியோருக்கு வழங்கினர்.
நிகழ்வில் “ஈழத்துச் சிற்றிதழ் போக்கில் துளிர்விடு சஞ்சிகை” எனும் தலைப்பில் ஆசிரியர் ஜிப்ரி ஹாசன் அறிமுக உரை நிகழ்த்தினார்.