இன்று 05.03.2024 நள்ளிரவு முதல் ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக Locomotive Operating (லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங்) பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும் பல தொழிற்சங்கங்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சந்தனலால் இன்று 05.03.2024 தெரிவித்துள்ளார்.
இதன்படி, ரயில் சாரதிகள் சங்கம், ரயில்வே் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் மற்றும் ரயில்வே மேற்பார்வை முகாமையாளர்கள் சங்கம் ஆகியன இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇