மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் ஏர் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் பாடசாலை அதிபர் கி.சிவலிங்கராஜா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்ட நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ச.தட்சணாமூர்த்தியும், விசேட அதிதிகளாக கிழக்கு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ப.இளங்கோ, வைத்தியர் இ.ஸ்ரீநாத் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன் போது பிரதேசத்தின் மண் வாசனை கமலும் கலாச்சார பண்பாட்டு, விழுமியங்களை பிரதிபலித்துக் காட்டும் வகையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடைய ஆங்கங்களை உள்ளடக்கிய ‘ஏர்’ சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது.
நூலின் ஆய்வுரையினை ஒய்வு நிலைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரன் தொகுத்து வழங்கினார்.
விளையாட்டு, கலை. பண்பாடு. மாணவர்களின் பாட அடைவு, பல்கலைக் கழகத் தெரிவு போன்றவற்றில் ஆர்வம் செலுத்தி சாதனைகளைப் படைத்த மாணவர்கள் இதன் போது சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
பொறியியல், விஞ்ஞானம், கலை மற்றும் வர்த்தகம் ஆகிய பிரிவுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு இதன் போது விஷ்ணு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇