2 வருடங்களாக ரயில் பயணத்தில் வாழ்க்கையை கழிக்கும் சிறுவன்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ரயில் பயணத்தை சிறுவர்கள் விரும்புவார்கள். ஆனால் ரயிலிலேயே 2 வருடங்களாக வாழ்க்கையை கழிக்கும் ஒரு சிறுவனை பற்றிய தகவல்கள் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது.

ஜேர்மனியில் உள்ள லாஸ் ஸ்டோலி என்பவர் தனது 15 வயதில் இருந்தே ரயிலில் வாழ ஆசை என பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், லாஸ் ஸ்டோலி அதனை பொருட்படுத்தாமல் தினமும் ரயிலிலேயே தனது வாழ்க்கை பயணத்தை கழிக்க தொடங்கினார். தினமும் முதல் வகுப்பு பெட்டியிலேயே 1,000 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இவர் டிபன், உணவு, தூக்கம் என அனைத்தையும் ரயிலிலேயே கழித்து வருகிறார். இதற்காக அதிக செலவு செய்கிறார்.

ஆனால் ஜேர்மன் ரயில்வே வழங்கும் வருடாந்த ரயில் அட்டையை பெற்றுள்ள லாஸ் ஸ்டோலி ஒரு வருடத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும், முதல் வகுப்பில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். இதற்காக இந்திய மதிப்பில் ரூ.8.5 இலட்சம் செலவு செய்கிறார். அதே நேரம் அவர் தான் தினமும் பயணம் செய்யும் வீடியோக்களை தனது வலைதளத்தில் பகிர்ந்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects