ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (07) நிதியமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் செயற்படுவதைக் காட்டும் வகையில் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வழமைக்கு திரும்புவது மகிழ்ச்சியளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அதிகாரிகளின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇