நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலையக புகையிரத மார்க்கத்தில் 20.10.2025 அன்றைய தினம் கடுமையான போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இன்று (20.10.2025) திட்டமிடப்பட்டிருந்த பல புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலன மற்றும் இஹல, கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையில், புகையிரத மார்க்கத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமை மற்றும் பாதைக்கு அருகில் இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டமையாலும் புகையிரத சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இஹல, கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளமையால் குறித்த மார்க்கத்திற்கான புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று திட்டமிடப்பட்டிருந்த 18 புகையிரத சேவைகளை இரத்து செய்துள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










