நாட்டில் தொடரும் வரட்சியான வானிலையை அடுத்து நீர் விநியோகத்தில் ஏற்படும் தடங்கல்கள் மற்றும் இடையூறுகளை அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கமொன்றை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் வறட்சியான வானிலையினால், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பல்வேறு பிரதேசங்களில் சீரான நீர் விநியோகத்தை வழங்குவதில் பல்வேறு தடைகளை எதிர்நோக்குகின்றது.
அன்றாடம் நீரின் தேவை அதிகரித்துள்ளமையானது நீர் வழங்கும் நடவடிக்கையில் பல தடங்கல்களை ஏற்படுத்துவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.
இதன் விளைவாக நாட்டின் சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் அல்லது கட்டுப்பாடுகளுடன் நீரை விநியோகிக்க வேண்டியுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.
இந்நிலையில், பொதுமக்களின் கருத்துக்களை இலகுவில் பெற்றுக் கொள்வதற்கும், நீர் விநியோகத்தில் ஏற்படும் தடங்கல்களை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கும் மற்றும் நீர் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்கவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, 1939 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇