இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி 13.03.2024 அன்று கொழும்பு பங்குச்சந்தைக்கு அறிவித்தது.
இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை தலைவராக செயற்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா,13.03.2024 அன்று முதல் அந்த பதவியில் இருந்து விலகியதாகவும் புதிய தலைவர் இன்று (14.03.2024) முதல் கடமைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சாகல ரத்நாயக்கவின் சகோதரரான காவன் ரத்நாயக்க கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பட்டதாரியாவார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇