சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) தலைவராக உள்ள நியூசிலாந்ததைச் சேரந்த கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பர் மாதம் முடிவடைகிறது. அவர் 3வது முறையாக போட்டியிடமாட்டேன் என அறிவித்துள்ளார்.
இதனால் ஐ.சி.சி.,தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ளவர்கள் ஓகஸ்ட் 27ம் திகதிக்குள் வேட்புமனுக்களை அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். எதிர்வரும் டிசம்பர் 1 முதல் முதல் அவர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇