அரச பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தை திருத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான முன்னோடித் திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அரச பாடசாலைகளின் கல்வி முறையில் தரம் 08 முதல் 13 ஆம் தரங்களுக்கு செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் தேவையான உதவிகளை வழங்குவதற்கு Microsoft அமைச்சுடன் கைகோர்த்துள்ளதாகவும் அமைச்சர் பிரேமஜயந்த வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், புதிய தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் சர்வதேச தரத்திற்கு ஏற்ப பாட அறிவை வழங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇