அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது இதற்காக 130,000 புதிய விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (15.03.2024) நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇