மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
குறித்த நியமனங்களை கண்டியில் இன்றைய தினம் வழங்குவதற்கு முன்னதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எனினும், தவிர்க்க முடியாத காரணத்தினால், குறித்த நியமனங்களை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் கண்டியில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு அடங்கிய கடிதங்கள் மத்திய மாகாண கல்விச் செயலாளரின் ஊடாக, மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇