திரிபோசா வழங்கப்படாமையினால் 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் 22.06.2024 அன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அதன் தலைவர் சமல் சஞ்சீவவே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 6 மாதங்களுக்கும் அதிகமான 3 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு திரிபோசா வழங்குமாறு பல கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், குறித்த வயதிற்கு இடைப்பட்ட குழந்தைகளே அதிகமாக போசனை குறைபாட்டிற்கு உள்ளாகி வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇