இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 537,887 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இம்மாதம் 1 ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 111,284 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்படி, இந்தியாவிலிருந்து 16,830 சுற்றுலாப்பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 16,548 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும் , ஜேர்மனியிலிருந்து 10,546 சுற்றுலாப்பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,926 சுற்றுலாப்பயணிகளும், பிரான்ஸிலிருந்து 7,018 சுற்றுலாப்பயணிகளும், சீனாவிலிருந்து 6,892 சுற்றுலாப்பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇