நாட்டில் இந்திய முட்டையின் விலையுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் முட்டைகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும், உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாகவும் உள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇