சம்பள திருத்தம் தொடர்பான COPF அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்டதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர், 21.03.2024 அன்று பொது நிதிக்கான குழுவிற்கு அறிவித்துள்ளார் என குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் சம்பளத்தை மீளாய்வு செய்வதற்கு குழு ஒன்றை நியமிப்பார் எனவும், அதுவரை சம்பள அதிகரிப்பு அடுத்த மாதம் முதல் வரை ஒத்திவைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விரைவான தீர்வு ஒன்றை உறுதி செய்வதற்காக குழுவின் அறிக்கைக்கு 4 வார கால அவகாசம் வழங்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇