தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையிலான சிறார்களுக்கு இன்று (25.03.2024) முதல் காலை உணவு வழங்கும் திட்டம் கல்வி அமைச்சினால் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை காலை உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உணவு வழங்கும் திட்டத்தில் போசாக்கு மற்றும் சுகாதாரம் என்பவற்றில் உணவு முறைமை உயரிய மட்டத்தில் பேணுவதற்கு கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதோடு, அரசாங்கத்தினால் இதற்காக 16.6 பில்லியன் ரூபா தொகை செலவிடப்படவுள்ளது.
9,134 அரச பாடசாலைகள் மற்றும் 100க்கு குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்ப வகுப்பு மாணவர்களை உள்ளடக்கிய 1.6 மில்லியன் பாடசாலை மாணவர்கள் இத் திட்டத்தின் ஊடக பயனடைவார்கள் என்று கூறப்படுகின்றது.
இச் செயற் திட்டத்திற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கும் அரசாங்கத்தினால் நேரடியாகவே 16,600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇