கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக அபூபக்கர் தாஹிர் அரசாங்க பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டு, அதற்கான உத்தியோகபூர்வ நியமனக்கடித்தத்தை 25.03.2024 அன்று அமைச்சின் செயலாளரிடமிருந்து பெற்றுக்கொண்ட நிலையில், 26.03.2024 அன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில், உதவிப்பிரதேச செயலாளர் எம்.ஆர்.ஷியாஉல் ஹக், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ், கணக்காளர் எம்.ஐ.எஸ்.சஜ்ஜாத் அஹமட், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.றஹீம், மேலதிக மாவட்டப்பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எ.ஐ.ஏ.அஸீஸ் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
நிருவாக சேவை அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டு உதவித்தொழில் ஆணையாளராக கொழும்பிலும் உதவிப்பிரதேச செயலாளராக தோப்பூரிலும் பிரதேச செயலாளராக மூதூரிலும் கடமையாற்றிய நிலையில், மட்டக்களப்பு மாவட்ட உதவித்தொழில் ஆணையளராகவும் நியமனம் பெற்றார்.
மட்டக்களப்பு மாவட்ட உதவித்தொழில் ஆணையாளராகவும், கிழக்கு மாகாண தொழில் ஆணையாளராகவும் கடமை புரிந்து வந்த நிலையில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇