உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் செயற்கையான விலை உயர்வைத் தடுக்கும் வகையில் விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு துறைகளின் உற்பத்திகள் தொடர்பான அனைத்து அமைச்சுக்களிடமிருந்தும் அறிக்கை கோருவதற்கு வர்த்தக அமைச்சு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதனால் ,விவசாயம், மீன்பிடி, கால்நடை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உற்பத்தி திறன் மற்றும் அவற்றின் விலைகள் தொடர்பான அறிக்கையை பெற்று நுகர்வோருக்கு தெரிவிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதன் பிரகாரம் , ஒவ்வொரு அமைச்சின் நிறுவனங்களிலிருந்தும் நாட்டுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் பொருட்களின் அளவு, அவற்றின் விலை மற்றும் நுகர்வோருக்கு அந்த பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஆகியவை உரிய அறிக்கையில் உள்ளடக்கப்படும் என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். .
இதனால், நாட்டின் உற்பத்திப் பொருட்களில் உபரி இருந்தால், அந்தத் தகவலும் வெளியிடப்படும் என்றும், உணவுப் பொருள்கள் அல்லது பொருட்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇