எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையின் பின்னர், பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பழக்கத்தை அதிகரிப்பதற்கும், போதுமான சுகாதார வசதிகளைப் பெறுவதில் சவால்களை எதிர்கொள்ளும் சிறுமிகளுக்கு உதவும் பொருட்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடையாளம் காணப்பட்ட பின்தங்கிய பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களுக்கான வவுச்சர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான சட்டமூலம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்காக அரசால் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிதி சுமார் ரூ. 1 பில்லியன் மற்றும் ஒவ்வொரு வவுச்சரின் மதிப்பும் சுமார் ரூ.1,200 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇