முட்டை விலை அதிகரிக்கப்படமாட்டாது வெளியான அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை முட்டையின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்னஸ்ரீ அழககோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள், உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், முட்டையின் விலை 35 ரூபாயாகக் குறைந்தால் சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

கடந்த 2023ஆம் ஆண்டு, அரசாங்கம் அதிகமான கோழிகளை இறக்குமதி செய்துள்ளது.

இதன் விளைவாக, 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் முட்டைகளினதும் கோழிக் குஞ்சுகளினதும் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக ரத்ன ஸ்ரீ அழககோன் மேலும் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects