யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு எதிர்வரும் காலங்களில் மாலை ஆறு மணி வரை இயங்கும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து பெரும்பாலானோர் வருகை தருகின்றனர். இதன் காரணமாக வெளி நோயாளர் பிரிவை பூரணை தினம் தவிர்ந்த ஏனைய வார நாட்களில் மாலை ஆறு மணி வரை இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇