ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சர்வதேச வர்த்தக சபையின் தலைவர் மரியா பெர்ணான்டா கர்சா (Maria Fernanda Garza) நேற்று (18) நாட்டை வந்தடைந்தார்.
அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அரச மற்றும் தனியார் பிரிவு உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் அவரது விஜயத்தின் போது, நாட்டின் சுற்றுலாத்துறை, பொருளாதார முன்னேற்றம் என்பன தொடர்பில் அவதானம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச வர்த்தக சபையின் தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது இதுவே முதற்தடவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇