மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் தலைமையிலும், சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டிலும், சங்கத்தின் உறுப்பினரான அல்ஹாஜ் KMM கலீல் ஹாஜியாரின் அனுசரணையிலும் ஒழுங்கு செய்யப்பட்ட இப்தார் விசேட நோன்பு துறக்கும் நிகழ்வு மட்டக்களப்பு சிறைச்சாலையில் 7-4-2024 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத் தலைவர் எபனேசர் தர்ஷன், காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் பெரிய மீரா ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் ALM பாயிஸ், சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தினால் கைதிகளுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பல்வேறு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதுடன், இன-மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.