2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது.
25 பேர் கொண்ட குறித்த குழாமில் மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்ஷன, நுவன் துஷார மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் இடம்பெறவில்லை.
குறித்த வீரர்கள் இம்முறை ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதால் இக் குழாமில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட நாட்களின் பின்னர் நிரோஷன் திக்வெல்ல, பானுக ராஜபக்ஷ ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜுன் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇