பெப்ரவரி 21, 2022 க்குப் பின்னர் முதல் தடவையாக, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 12,000 அலகுகளை இன்று (10) கடந்துள்ளது.
இதன்படி, அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 70.61 அலகுகளால் அதிகரித்து, நாள் நிறைவில் 12,033.10 அலகுகளாகப் பதிவானது.
இதேவேளை, S&P SL20 சுட்டெண் 33.81 புள்ளிகளால் அதிகரித்து, நாள் நிறைவில் 3,580.64 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
ரூ. 2.96 பில்லியன் இன்றைய பங்குச் சந்தையின் மொத்த புரள்வாக பதிவாகியுள்ளது.
Commercial Bank, HNB Bank, LOLC Holdings Plc, Sampath Bank மற்றும் Melstacorp போன்ற நிறுவனங்கள் அனைத்துப் பங்கு விலைக் குறியீட்டின் வளர்ச்சிக்கும் அதிக சாதகமான பங்களிப்பை வழங்கின.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇