மட்டக்களப்பு மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு இளைஞர்கள் சேவை மன்றத்தில் 14 .10.2023 அன்று வினைத்திறன் வகுப்பறைகள் ( Smart Class Room ) தேசிய இளைஞர்கள் சேவை மன்றப் பணிப்பாளர் நாயகம் பசிந்து குணரத்னவின்தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் தேசிய இளைஞர்கள் சேவை மன்றப் பணிப்பாளர் நாயகம் பசிந்து குணரத்ன, அம்கோர் நிறுவனத்தின் சிரேஸ்ட நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் திரு.யோ. சிவயோகராஜன், தேசிய இளைஞர்கள் சேவை மன்ற கிழக்கு மாகாண பணிப்பாளர் சரத் சந்திரபால, தேசிய இளைஞர்கள் சேவை மன்ற முன்னாள் மாகாண பணிப்பாளர் பொன். செல்வநாயகம், தேசிய இளைஞர்கள் சேவை மன்ற நிர்வாக அதிகாரி கே.தியாகராஜா, தேசிய இளைஞர்கள் சேவை மன்ற மாவட்ட உதவி இயக்குனர் ஜேசுதாசன் கலாராணி, இளைஞர் தொழிற்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி என்.குகதாஸ் மற்றும் பயிற்சி வழங்கும் போதனா ஆசிரியர்களென பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந் நிகழ்வில் அம்கோர் நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் அழகுக்கலை மற்றும் தையல் பயிற்சியினைப் பெறும் யுவதிகளுக்கு பயிற்சிக்கான உபகரணங்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇