மட்டக்களப்பில் உள்ள கல்லடி பழைய பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் 30 இற்கும் மேற்பட்ட சுய தொழில் முயற்சியாளர்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தினை ஈட்டி வருகின்றனர்.
இதேவேளை அமைக்கப்பட்டிருந்த தற்காலிக விற்பனைக் கூடாரங்களின் மேற்கூரை விரிப்புக்கள் கடந்த சில மாதங்களாக சிதைவடைந்து வெயில் மற்றும் மழை காலங்களில் தமது வியாபார நடவடிக்கையினை முன்னெடுக்க முடியாமல் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
குறித்த விற்பனையாளர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் மட்டக்களப்பின் பிரபல தொழிலதிபரும், மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவரும் சமூக ஆர்வலருமான தேசபந்து முத்துக்குமார் செல்வராசா விற்பனை கூடாரங்களுக்கான மேற்கூரை விரிப்புக்களை பல இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக மாற்றியமைத்தத்துடன் மேலும் அவர்களுக்கு தேவைப்பாடாகவுள்ள பல விடயங்களை செய்து தருவதாக தெரிவித்துள்ள இவர் குறித்த செயற்பாட்டின் ஊடாக சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.
இவ்வாறாக சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்திய தொழிலதிபரை சுய தொழில் முயற்சியாளர்கள் நேரில் சென்று நன்றி தெரிவித்து, பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்துள்ளதுடன், முத்துக்குமார் செல்வராசா மற்றும் அவரது பாரியாருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇