2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்களினூடாக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தபாலினூாடக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை பரீட்சைக்கு 452,979 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇