மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக அரச அதிகாரிகளுக்கு விசேட செயலமர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக அரச அதிகாரிகளான பிரதேச செயலாளர்கள், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கான நான்கு நாள் விசேட செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (22.10.2025) ஆரம்பமானது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்தின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வானது பெறுகை முகாமைத்துவம் மற்றும் ஒப்பந்த நிர்வாகம் ஆகிய பரப்புக்களை உள்ளடக்கி அவற்றில் உள்ள புதிய விடயங்கள் தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு தெளிவு படுத்தும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நான்கு நாட்கள் கொண்ட இச் செயலமர்வின் முதல் கட்டம் 22 மற்றும் 23 ஆந் திகதிகளில் இடம்பெறுகின்றன. செயலமர்வின் வளவாளராக ஓய்வு பெற்ற வட மாகாண பிரதி பிரதம செயலாளர், பொறியியல் நிபுணருமான எஸ். சண்முகானந்தன் கலந்து கொண்டு விளக்கங்களையும், சந்தேகங்களுக்கான தெளிவுகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects