நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் 3,646 குடும்பங்களைச் சேர்ந்த 11,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் 18.04.2024 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான குடும்பங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 2,487 குடும்பங்களைச் சேர்ந்த 7,461 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் வறட்சியான காலநிலை காரணமாக கேகாலை மாவட்டத்தில் 2,813 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 949 பேரும், பதுளை மாவட்டத்தில் 190 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇