நாடாளுமன்ற சட்டத்தின் ஊடாக உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சட்ட வரைவைத் தயாரிப்பதற்கான எண்ணக்கருப் பத்திரம், குறித்த தரப்பினருடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை, நிலைமாறுகால நீதி, நல்லிணக்கம், இழப்பீடுகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇