வெள்ள அனர்த்தத்தைக் குறைப்பதற்காக காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு அறிக்கையை கையளிக்கும் நிகழ்வு 18.04.2024 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
LIFT நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி. ஜானு முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொழில்நுட்ப ஆய்வு பற்றியும் அதற்கான அறிக்கைகள் பற்றிய விளக்கங்களையும் Global Innovative Builders நிறுவனத்தின் பொறியியலாளர் அரவிந்தனினால் தெளிவுபடுத்தப்பட்டது.
இதன்போது இடம்பெற்ற பல்வேறு கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, Global Innovative Builders நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையானது LIFT நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டதுடன் அரச திணைக்கள அதிகாரிகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் ப. உதயஶ்ரீதர், ஆரையம்பதி பிரதேச செயலாளர் தட்சணகௌரி தினேஸ், காத்தான்குடி நகரசபை செயலாளர் ரிஸ்கா சபீர், ஆரையம்பதி பிரதேச சபை செயலாளர் சர்வேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் சுபாஸ்கரன், அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் ரியாஸ் மற்றும் USAID- Global Communities அமைப்பின் சிரேஸ்ட பிராந்திய திட்ட முகாமையாளர் சிவானந்தன் உட்பட கிராமசேவைகள் உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
USAID- Global Communities நிறுவனத்தின் நிதி அனுசரணையில் LIFT தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் இத்திட்டம் முன்னெடுக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇