உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விஜயம் செய்யவுள்ளார்.
ஈரானின் ஏற்றுமதி அபிவிருத்தி வங்கியின் கடனுதவியுடன் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் 2011 இல் ஆரம்பிக்கப்பட்டது.
ஊவா மாகாணத்தை மையமாகக் கொண்ட இந்த பல்நோக்கு திட்டம் 24 கிலோமீற்றர் நீளம் கொண்டது.
புஹுல்பொல நீர்த்தேக்கத்தில் இருந்து 4 கிலோமீற்றர் தூரத்திற்கு பாதாள குழாய்கள் மூலம் டயரபா நீர்த்தேக்கத்திற்கு நீர் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் டயரபா நீர்த்தேக்கத்திலிருந்து 15.5 கிலோமீற்றர் நீளமான பாதாள பாதையின் ஊடாக பவர்ஹவுஸ் ஆலைக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.
இதனூடாக, இந்நாட்டின் தேசிய மின்சார அமைப்பில் இணைக்கப்படும் மின்சாரத் திறன் 120 மெகாவோட் ஆகும்.
அத்துடன், அத் திட்டத்தின் ஊடாக பண்டாரவளை, பதுளை, மொனராகலை ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகமும், பதுளை, மொனராகலை பிரதேசங்களில் விவசாயத் தேவைகளுக்கான நீரும் வழங்கப்படவுள்ளன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇