நாட்டின் கரையோர பகுதிகளில் 2,500க்கும் மேற்பட்ட சட்டவிரோத கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சட்டவிரோத கட்டமைப்புகளை அகற்றும் செயல்முறை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.
சட்டத்தின்படி, கரையோரத்திலிருந்து 10 முதல் 25 மீற்றர் வரையிலான வலயத்துக்குள் எந்த கட்டுமானமும் அனுமதிக்கப்படாது.
இருப்பினும், பல்வேறு தரப்பினர் அண்மைய காலங்களில் இந்த விதிமுறைகளைப் புறக்கணித்து, கரையோர சூழலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










