தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை நியமிப்பதற்கான, நேர்முகப் பரீட்சைகளை எதிர்வரும் வாரங்களில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி போட்டிப் பரீட்சையொன்று நடத்தப்பட்டது.
இப் போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மே மாதம் 9ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நேர்முகப்பரீட்சைக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் மற்றும் அழைப்புக் கடிதம் என்பன கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇