இந்தியாவின் தீன தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம் தனது பட்டப் படிப்பு கற்கை நெறிகளைத் தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களிடமிருது விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
தீன தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம் சுதந்திரத்தின் பின்னர் 1957 இல் உத்தர பிரதேஷத்தில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது பல்கலைக் கழகமாகும். இந்தியாவிலுள்ள 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இப்பல்கலைக் கழகம் பட்டியலிடப்பட்டுள்ளது உயர்வான கல்வி மரபினைக் கொண்டிருக்கும் இப் பல்கலைக் கழகம் உயர் தகுதியுடையதும் அர்ப்பணிப்புடையதுமான புலமையாளர்களையும், ஏனைய மேம்பட்ட ஆராய்ச்சி வசதிகளையும் கொண்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை https://dduguadmission.in/intcell/ என்ற இணையத் தளத்தில் பார்வையிடமுடியும். பதிவுகளை மேற்கொள்வதற்கான இறுதி திகதி (07.05.2024) ஆம் திகதி ஆகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇