ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக பால் நிலை பரிணாம மாற்றம் தொடர்பான கண்காட்சி 22.04.2024 அன்று முதல் 24.04.2024 இன்று வரை மட்டக்களப்பு தெய்வநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.
கனடா அரசு மற்றும் ராயல் நார்வேஜியன் தூதரகத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற இப் பால்நிலை பரிணாம மாற்றம் மற்றும் பெண் தன் மேம்பாடடைதல் – ஓர் பயணம்; நெருக்கடிகளிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு வழி எனும் செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
உலகின் 60 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் 30 நாடுகளில் பெண்களுக்கான வேலை தொடர்பான பிரச்சனைகள் காணப்படுகின்றன. அதில் 53 விதமானவர்கள் கடன் பிரச்சினையில் எதிர் நோக்குவதாக புள்ளி விபர ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதன்போது விசேட அதிதியாகக் கலந்துகொண்ட அமெரிக்க துதுவர் யூலிசங் உரையாற்றுகையில்;
உலகளாவிய ரீதியில் இவ்வாறு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண்களை வலுவூட்டும் திட்டங்களைத் தொடர்ந்தும் எதிர் காலத்தில் மேற்கொள்ள மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.
அத்துடன் வருமான பங்கிட்டில் சமத்துவமின்மை, கல்வி, பெருளாதார பிரச்சினைகள் பெண்களை தாக்குகின்றது. அதனால், பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அமெரிக்க துதுவர் யூலிசங் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அவுஸ்சா குபோட்டா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் திட்ட நிபுணர் கே.பார்த்திபன், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நாட்டின் ஏழு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இவ்வேலைத்திட்டத்தின் இறுதி நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்தப்பட்டு இக்கண்காட்சியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇