இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு சங்கம் என்ற ரீதியில், தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால்மாவின் விலை திருத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 400 கிராம் பால்மாவின் விலையை 60 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 150 ரூபாவாலும் குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எவ்வாறாயினும், இன்று (25.04.2024) முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பால்மாவின் விலையைக் குறைப்பதாக நியூசிலாந்தில் இருந்து பால்மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று 24.04.2024 அன்று அறிவித்திருந்தது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலை 250 முதல் 350 ரூபாய் வரையிலும், 400 கிராம் பால்மா பொதியின் விலை 100 முதல் 140 ரூபாய் வரையிலும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான அறிக்கைக்கும் பால்மா இறக்குமதியாளர் சங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇