உலகில் ஆஸ்துமா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் மொத்த சனத்தொகையில் 10 முதல் 15 சதவீதமானவர்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியோர்களை பெரும் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என தெரிவித்துள்ளார்.
எனவே, ஆஸ்துமா நோயை உரிய முறையில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது மரணத்திற்குக் கூட வழிவகுக்கும்.
90 சதவீதமான ஆஸ்துமா நோயாளர்களை இலகுவாக மிகவும் குறைந்த செலவில் மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும் என வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500,000 பேர் துரதிஷ்டவசமாக ஆஸ்துமாவால் உயிரிழக்கின்றனர்.
உலக ஆஸ்துமா தினம் மே 7 ஆம் திகதி வருகிறது. அன்று சுவாச நோய் நிபுணர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇