மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் புதுவருட விளையாட்டு விழா 24.04.2024 அன்று பாட்டாளிபுரம் மைதானத்திலும் 25.04.2024 அன்று வெபர் மைதானத்திலும் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன் அதிதியாக கலந்து கொண்டார்.
கணக்காளர், கிராம நிர்வாக உத்தியோகத்தர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் தலைமையில் 4 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன.
இதில் எல்லே, கிரிக்கட், மாவுக்குள் காசு எடுத்தல், தேசிக்காய் ஓட்டம், சாக்கு ஓட்டம், வேக நடை (ஆண்கள், பெண்கள்), பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல், போத்தலில் நீர் நிரப்புதல், தொப்பி மாற்றுதல், நிலை தடுமாறுதல், அஞ்சல் ஓட்டம் போன்ற விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.
இவ்விளையாட்டு போட்டியில் உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர்கள், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக உத்தியோகத்தர், கிராம சேவை அதிகாரிகள் உள்ளிட்ட சக அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதில் கணக்காளர் தலைமையிலான Yellow அணியானது 82 புள்ளிகளைப் பெற்று முதலிடமும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தலைமையிலான GREEN (57), BLUE (45) முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇