2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (06.05.2024) ஆரம்பமாகியது.
குறித்த பரீட்சை இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.
இந் நிலையில் குறித்த பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூரத்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்திகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇