கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று (06.05.2024) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.39 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இது 0.32 சதவீத அதிகரிப்பாகும்.
அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.19 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இது 0.24 சதவீத அதிகரிப்பாகும்.
காசா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் நேற்று நடத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்தமையால் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇