இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாம் நாளைய தினம் நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.
இன்று பிற்பகல் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறும் சர்வமத வழிபாடுகளில் இலங்கைக் குழாம் பங்கேற்கவுள்ளது.
வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கைக் குழாம் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜுன் மாதம் 2ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இலங்கை அணி பங்கேற்கும் முதலாவது போட்டி ஜுன் மாதம் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇