மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட மக்களினால் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் முன்வைத்த நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பில் இருந்து தூர இடங்களுக்கான புகையிரதசேவையை முன்னெடடுக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கான கள விஜயத்தினை முன்னெடுத்திருந்த போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன், அதிகாரசபை பொறியியலாளர் (கிழக்கு) நிசல் லியனாராச்சி உட்பட பிரதி நிலைய உத்தியோகத்தர்கள் , அரச அதிகாரிகள் புகையிரத நிலையத்தின் உயரதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇